30/12/2011

முதல் மரியாதை -Flute Bit

Flute  என்ற இசைக்கருவி,  keyboard வந்த பிறகு காணாமல் போய் விட்டது.

முதல் மரியாதை  படத்தில் நமது தலைவர் இசைஞானி Flute யை அழகாக பயன் படுத்தி இருப்பார்..

30  நொடிகளே கொண்ட  ஒரு காட்சியில்...
ஒரு காதலனின்  ஏக்கத்தையும், தவிப்பையும்..  அழகாக இசைத்திருப்பார்...

சோகத்திலும் சுகம் சேர்க்கும்  நமது  இசைபிரம்மனின் அந்த அற்புதத்தை கேளுங்கள்...


26/12/2011

Rare BGM -ராசுகுட்டி

ராசுகுட்டி  BGM

இந்த மாதிரி சில அரிய பின்னணி இசையை ஆழ்ந்து  ரசிப்பது தான்  என்னோட இசை குணம்...

இந்த பின்னணி இசைக்காகவே  1992 தீபாவளிக்கு  வெளிவந்த  இந்த படத்தை ஆறு ஏழு முறை பார்த்திருக்கேன்,,,, இது நல்ல படமும் கூட..

காதலுக்கான  ஏக்கமும், தவிப்பும், அழகாக பின்னணி இசையில் சொல்லபட்டிருக்கும்...  எல்லாம் இசைஞானியின் இசைஜாலம்..


கர்ஜனை - Disco Love Theme


MEERA - OUTSTANDING TITLE BGM


தேனிசை தென்றல் தேவா - ஒரு முன்னோட்டம்

தேவா

இவரை பற்றி கேட்டாலே இவருடைய கானா பாடல்கள் தான் நமக்கு ஞாபகம் வரும்..
இன்னொன்றும் ஞாபகம் வரும் ....இவர் காப்பி அடிப்பதில் கை தேர்ந்தவர் என்று.. இவருடைய பெரும்பாலான பாடல்கள் ஆங்கில ஆல்பங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. நமது தலைவர் இசைஞானி பாடல்களையும் காப்பி அடித்துள்ளார். அதை அவரே ஒப்புக்கொண்டும் விட்டார். ஒரு கால கட்டத்திற்கு மேல் இவரால் திரை உலகில் நிலைக்க முடியவில்லை. மக்கள் இவரை ஒதுக்கி தள்ளினர்...இன்று வாய்ப்புகள் குறைந்து, தடுமாறி..ஏதோ சில படங்களுக்கு இசை அமைக்கின்றார்.......
இது எல்லோருக்கும் தெரியுமே...என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கேட்கிறீர்களா?
தேவா மட்டும் தான் இந்த வேலையை செய்கிறாரா?
இன்று உள்ள பல இசை அமைப்பாளர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? இதே வேலையை ரொம்ப சாமர்த்தியமாக செய்கிறார்கள்... இவர்களை என்ன செய்வது? இசையை இவர்கள் தான் உருவாக்கியது போல் இவர்களை மட்டும் ஏன் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்?

எனக்கு தேவாவை பிடிக்கும்....அவருடைய ஆரம்ப கால இசை பயணத்திலிருந்து அவரை கவனித்துக்கொண்டே வந்துள்ளேன்... அவருடைய காப்பி அடிக்காத பல நல்ல பாடல்களை, பின்னணி இசைகளை வெகுவாய் ரசித்துள்ளேன்...

அவருடைய காப்பி அடிக்காத இசையை எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள்? அவருடைய பின்னணி இசைகளை எத்தனை பேர் கேட்டிருப்பீர்கள்?
நீங்களும் அறிந்து கொள்ள... தேவாவின் சில நல்ல இசைகளை நான் அவ்வபோது தருகிறேன்...

ஒரு விழாவில் திரு.பஞ்சு அருணாசலம் அவர்கள் பேசியது....

பஞ்சு அருணாசலம் : 'அன்னக்கிளி' படத்துக்கு இசையமைக்க இளையராஜாவுக்கு நான் கொடுத்த சம்பளம் வெறும் மூவாயிரத்து ஒன்றுதான். அவர், 100 படங்களுக்கு இசையமைத்த பின்புதான் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார். அதுவரை ரூ 25 ஆயிரம் பெற்றுக் கொண்டார். சம்பளத்தை விட சாதனையைத்தான் அவர் பெரிதாக நினைத்தார்.

ஆனால் இப்போது, படம் இரண்டு வாரம் ஓடி கொஞ்சம் வசூல் செய்தால் போதும். அந்த படத்தின் கதாநாயகன், கதாநாயகி, டைரக்டர் தங்களின் அடுத்த படத்துக்கு 75 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்கள். இசையமைப்பாளர்கள் கோடிகளில் சம்பளம் பேசுகிறார்கள்.

யார் திறமைசாலி என்பதில் போட்டி இல்லை. யார் அதிக சம்பளம் வாங்குவது? என்பதில்தான் இப்போது போட்டி இருக்கிறது. இது நல்லதா... சினிமா எப்படி வளரும்?,"