14/07/2015

'மெல்லிசை மேதை'  M .S.விஸ்வநாதன்

வெளிய தெரியாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்  இந்த மாபெரும் இசை மேதை...
மக்கள் திலகமும், நடிகர் திலகமும்  நம்மில்  என்றும் நிலைத்திருப்பதற்கு,  இவரின் இசைக்கு மாபெரும் பங்குண்டு

தொழில்நுட்பம் வளராத காலத்திலேயே, அற்புதமான மெட்டுக்களை உருவாக்கி , வாத்தியங்களை வைத்து    இவர் செய்த ஜாலங்கள் கொஞ்சமல்ல...

M .G .R . க்கு ஒருவகை இசை   ...சிவாஜிக்கு ஒருவகை இசை,  ஜெமினிக்கு ஒரு வகை இசை.... ஸ்ரீதர், பாலச்சந்தர்  திரைப்படங்களுக்கு ஒரு இசை... இப்படி ஒவ்வொரு  வகையறாவுக்கும், ஒவ்வொரு  வகையான இசைஅமைத்த   மெட்டின் மேதை...

எத்தனையோ அற்புதமான  பாடகர்களை நமக்கு அருளிய  இசை வள்ளல்...

பாடல்களில் மட்டும் அல்லாமல்,  பின்னணி இசையின் மூலமும்  உயிர் கொடுத்து  பல படங்களை  வெற்றி பெற செய்திருக்கிறார்  இந்த  இசை ஜாம்பவான்..

தமிழ்நாட்டை பொறுத்தவரை  இசைக்கு  இரண்டு காலம் தான்

ஒன்று MSV காலம்,  இன்னொன்று இளையராஜா காலம்

SREENIVASANMUSIC.BLOGSPOT.COM
M.S .விஸ்வநாதன் மறைவு

இசைத்தாயின் மூத்த மகன்  மறைந்து போனது,  இந்நாட்டின் மாபெரும் இழப்பு....இனி இது போல் ஒரு மெல்லிசை மேதை கிடைப்பாரா நமக்கு?

இந்தியாவில்  குறிப்பிட்டு சொல்லகூடிய  மிகச்சிறந்த 
இசைஅமைப்பாளர்களில்  ஒருவர் .

கலைமகளின் கைகளில் கொண்ட வீணையை   மீட்டத்தகுதியான  ஒரு உன்னத இசை கலைஞர்...

தன்னை விளம்பரபடுத்திக்கொள்ள தெரியாத, கள்ளம் கபடமற்ற  அற்புத மனிதர்...

இன்று  உடலாக   இவ்வுலகில்   இல்லையென்றாலும், அவரின் படைப்புகள் என்றும் நம் ஆன்மாவில் உறைந்திருக்கும்...

அந்த நல் ஆன்மா  சாந்தி  அடையட்டும்...

sreenivasanmusic.blogspot.com

12/07/2015

ஓகே கண்மணிக்கு ஓராயிரம் LIKE கள் போட்டவர்களே
அலைபாயுதேக்கு ஆயிரம் LIKEகள் போட்டவர்களே
வாரணம் ஆயிரத்திற்கு வரிந்து வரிந்து COMMENT போட்டவர்களே
விண்ணை தாண்டி வருவாயாவிற்கு வியர்த்து வியர்த்து LIKE & COMMENT போட்டவர்களே...
பாபநாசம் வென்றுவிட்டது
ஆனால் இப்போது மட்டும் மௌனம் காப்பீர்கள்.....
காரணம் உங்கள் கோமாளித்தனமான நாகரீகத்திற்கு வயதாகிவிட்டதென்று உங்கள் சக பதறுகள் உங்களை ஏசுவார்கள் என்று....
SREENIVASANMUSIC.BLOGSPOT.COM
பாபநாசம்  - என் பார்வையில்

கேரளாவில் மாபெரும் வெற்றி பெற்று, வசூலில் பல சாதனைகளை முறியடித்த  "த்ரிஷ்யம்"   தமிழில் பாபநாசமாக...
அதே யதார்த்தத்துடன்...

-----பாராட்டப்படவேண்டிய  இரண்டு பேர்கள்----
1. ஒரு மலையாள இயக்குனர்   நெல்லை மண்வாசனையோடு  ஒரு நல்ல தமிழ்படம் தந்ததற்காக  இயக்குனர்  ஜீத்து ஜோசப்பிற்கு  ஒரு மணிமகுடமே சூட்டலாம். 
நல்ல கதை..அதை விறுவிருப்பாக லாஜிக் மீறாமல் சொல்லி இருக்கும் விதம்....எந்த கதாபாத்திரத்தையும்  யதார்த்தம்மீறாமல்  இயக்கி  இருப்பது...   எல்லாமே அருமை...     நன்றி  ஜீத்து ச்சேட்டா

2.  கமல்
நேற்று முளைத்த காளான்களெல்லாம் போடும்ஆட்டத்துக்கு மத்தியில்,
உலகநாயகன்   வெறும் சாதாரண குடும்பத்தலைவானாக........
ஒரு மாபெரும் நடிகன் ....    இவ்வளவு சாதாரணமாக திரையில்  தோன்றி  நம்மில் ஒருவராக வாழ்ந்துகாட்டி இருப்பது ஆச்சர்யம்...
அது கமலால் மட்டுமே சாத்தியம்.. கோடி நன்றிகள்  கமல்ஜி   


-----தலைகுனிய வேண்டியவர்கள்---
குத்துபாடல்கள், சண்டைகாட்சிகள், பஞ்ச் வசனங்கள் இல்லாத, லாஜிக் மீறாத  மிகவும் யதார்த்தமான ஒரு  தமிழ் படம்....அதன் இயக்குனர் ஒரு மலையாளி.... 
இன்றைய  தமிழ்இயக்குனர்கள், தமிழ் நடிகர்கள்  பலரும் வெட்கி, தலை குனியவேண்டிய  விஷயம்...

----பாபநாசம்----
நிம்மதியாக  வாழ்ந்து கொண்டிருக்கும்  ஒரு குடும்பத்தின்  தற்காப்பிற்காக  செய்யப்பட்ட  தாக்குதல்  கொலையில் முடிகிறது.   நியாயத்திற்காக தங்களை தற்காத்துக்கொண்ட  அந்த குடும்பம்   சட்டத்தை எப்படி மேற்கொள்கிறது என்பதே  பாபநாசம்....

-----கதாபாத்திரங்களாக  வாழ்ந்தவர்கள்-----
சுயம்புலிங்கமாக  கமல்... ஹீரோயிசம் இல்லாத யதார்த்தமான குடும்பதலைவானாக நெல்லைத்தமிழ் பேசி  சுயம்புலிங்கமாக வாழ்ந்துகாட்டி இருக்கிறார்... தன்னை விமர்சிப்பவர்களுக்கு   தன் நேர்த்தியான நடிப்பிலேயே  பதிலடி கொடுத்திருக்கிறார்.. கிண்டல், பாசம், உருக்கம், அழுகை, சோகம்....எல்லா முகபாவங்களும் க்ளாஸ்.  
கமலின் ஒவ்வொரு படைப்பையும் வசைபாடும் கூட்டம்  இப்போது எங்கே கொண்டுசென்று வைத்துகொள்ள போகிறதோ தன் முகங்களை..

கமலின் மனைவியாக கௌதமி... நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில்...  அழகாக நெல்லை தமிழ்பேசி  அலட்டிகொள்ளாமல் நடித்திருக்கிறார்... நடிப்பை தொடரலாம்.  
கமலின் மகள்களாக  நிவேதா தாமஸ், எஸ்தர் அனில்.  இரண்டுபேரும்  கேரளாவை சேர்ந்தவர்கள்.    நிறைவான நடிப்பு..

கமலுக்கு அடுத்து  மனதில் பதியக்கூடியவர்கள்....
ஆஷா சரத் & ஆனந்த் மகாதேவன்..(இவர்களும் கேரளாவை  சேர்ந்தவர்கள்)
அதிலும்  ஆஷா சரத்.... மிரட்டலான அவர் பார்வை....நிஜமான ஒரு பெண்  ஐ.ஜி யை  கண் முன் நிறுத்துகிறார்... தியேட்டரே  கப்ச்சிப் ஆகும் அளவிற்கு நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.. 
ஆனந்த் மகாதேவன் - அமைதியான உருக்கமான நடிப்பு..

கான்ஸ்டபிள் பெருமாளாக  கலாபவன் மணி-  பெரும்பாலான நிஜ  போலீஸை  அப்படியே  பிரதிபலிக்கிறார்...
எகத்தாளமான அந்த பார்வை,  போலீஸ் மிரட்டல்...அற்புதமாக செய்திருக்கிறார்...  நெல்லை தமிழ் பேச  முயன்றிருக்கிறார்... பாராட்டலாம்

முஸ்லிம் பாயாக M .S பாஸ்கர் - சொல்லியா தர வேண்டும்..நெல்லை தமிழில் கொள்ளை கொள்கிறார்..
இளவரசு, வையாபுரி, சார்லி....குறைவாக வந்து போனாலும் நிறைவாக செய்திருக்கிறார்கள்..

எல்லா நடிகர்களையும்   யதார்த்தம் மாறாமல்  அந்தந்த பாத்திரங்களாகவே  வாழ வைத்திருப்பது,   விறுவிறுப்பான திரைக்கதையை கடைசிவரை தொய்வில்லாமல் கொண்டு செல்வது,   இப்படி எல்லாவற்றிலும்  ஜெயித்திருக்கிறார்  இயக்குனர்....
சந்தடி சாக்கில்   நிஜ காவல் துறை  எப்படி இருக்கும்,  அவர்களின்  அராஜகங்கள், போலிவிசாரணைகள்  எப்படி இருக்கும் என்பதை  சாதாரண குடிமகனுக்கும்  புரியும்படி  அங்கங்கே  வெட்ட வெளிச்சமாக சொல்லி இருக்கிறார் ... அதற்கு ஸ்பெசலாக இன்னொரு நன்றி சொல்லலாம்  


பாப நாசத்தின் இன்னொரு பலம் ஒளிப்பதிவாளர்   சுஜித் வாசுதேவ் (த்ரிஷ்யம் படத்திற்கும்  இவரே) 
கன கச்சிதம்...  குளிர்ச்சி...

எடிட்டிங் - அயூப் கான் (த்ரிஷ்யம் படத்திற்கும்  இவரே)-  விறுவிறுப்பான திரைக்கதையை  குழப்பாமல் அட்டகாசமாக  தொகுத்திருக்கிறார்.

வசனம் - ஜெயமோகன்... அளவான ஆனால் அர்த்தமுள்ள வசனங்கள்.

இசை -ஜிப்ரான்
வழக்கமான வித்தியாசமான ஜிப்ரான் இசை...பாடல்களில் கோட்டை விட்டவர்  பின்னணி இசையில்  கொஞ்சம் மிரட்டி பார்க்கிறார்...

மொத்தத்தில்  மலையாளத்தில் மாபெரும்  வெற்றி பெற்ற ஒரு குடும்ப  கதையை...அதே விறுவிருப்புடன்  தொய்வில்லாமல்....
நெல்லைதமிழ் மண்வாசனையுடன்  மறுஉருவாக்கம்  செய்ததில்   இங்கேயும் வென்றிருக்கிறார்  இயக்குனர் ஜீத்து ஜோசப்...

படம் முடிந்து  வெளிய வரும்போது   நெல்லை மண்ணிலே வாழ்ந்து விட்டு வந்த  ஒரு மன நிறைவு...

நல்ல சினிமாவிற்கு ஏங்கித்தவிக்கும்  தமிழ் ரசிகர்களுக்கு  பாபநாசம் ஒரு வரப்ப்ரசாதம்...

பாபநாசம் - அட்டகாசம்
SREENIVASANMUSIC.BLOGSPOTCOM

31/08/2013

அதோ அந்த நதியோரம் MOSTERECO EFFECT

பிரபலமான பாடல்களை மட்டும்தான்  மெருகேற்ற வேண்டுமா என்ன?
எனக்கு பிடித்த 90 களின் சிறந்த பாடல்களில் ஒன்றை  MOSTERECO EFFECTSஉடன்  மெருகேற்றி இருக்கிறேன்..
ஏழை ஜாதி 1993 - அதோ அந்த நதியோரம் 
இந்த பாடலை மெருகேற்றுவதர்க்குள்,   திணறிப்போனேன்..
இனிய இசைக்கு ஈடு கொடுக்கும்  S .ஜானகியின் குரல் ஏக்கத்தை வரவழைத்து ஈர்க்கிறது.
என்னே  அற்புதமான மெட்டு...என்னே பிரம்மாண்டமான இசை..
வாழ்க  இசை ராஜா... 

29/07/2013

தென்மதுரை வைகை நதி - Family Song to Love Solo



சகோதர நேசம் பாசம்,  காதலின் நேசம் பாசம்  கலந்த இந்த வைகை நதியிலிருந்து,   காதலை மட்டும் பிரித்து எடுத்து   காதல் பாடலாக  கேட்டால் என்னவென்று தோன்றியது...
இசைஞானியின் இசைநதியை  எந்த வடிவத்தில் வடித்து   சுவைத்தாலும்   சுகம்...

மதுர மரிக்கொழுந்து வாசம்..DUET TO SOLO WITH STECO MIX

27/07/2013

ஒளியிலே தெரிவது தேவதையா... EDITED WITH STECO EFFECTS




 நீண்ட இசைவெளிக்கு பிறகு இசைஞானியின் விஸ்வரூபம் வெளிப்பட்டது
 " அழகி " திரைப்படத்தில்....

பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி..
ராஜாவின் இசை.... எண்பதுகளில் அவர் தந்த இசையை போல.. மனதில் நீங்கா இடம் பெற்று.. நெஞ்சினில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கிறது...

ஒளியிலே தெரிவது தேவதையா.? உயிரிலே கலந்தது நீ இல்லையா..?

ஒலியிலே தெரிவது இசைதேவதை
உயிரிலே கலந்தது இசைஞானி இசை..


ஒளியிலே தெரிவது தேவதையா... உயிரிலே கலந்தது நீ இல்லையா..ன்னு ஆரம்பிக்கும்
இந்த வரிகளை மாற்றி போட்டு...

என்னோட TASTE க்கு  தகுந்த மாதிரி...
உயிரிலே கலந்தது  தேவதையா... ஒளியிலே தெரிவது நீ இல்லையான்னு    EDIT செய்து.... STECO MIX  செய்திருக்கிறேன்..